18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடும்பத் தகராறு காரணமாக குடும்பத்துடன் தற்கொலை முயற்சி..சிறுவன் பலி.. மூவர் கவலைக்கிடம்.

குடும்பத் தகராறு காரணமாக குடும்பத்துடன் தற்கொலை முயற்சி..சிறுவன் பலி.. மூவர் கவலைக்கிடம்.

எழுதியவர்: ஆசிரியர் February 12, 2019, 2:02 am

குடும்பத்தகராறு காரணமாக தாய் மற்றும் 3 மகன்களுடன் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை முயற்சி எட்டு வயது சிறுவன் பலி மற்ற இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேரும் கவலைக்கிடம்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காவல் நிலையத்திற்கு உட்பட்ட விராலிபட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் இவர் நிலக்கோட்டை பகுதியில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவியும் கதிரேசன் ரவிக்குமார் குமரேசன் என்று 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இன்று (11/02/2019) மாலை செல்வி தனது மூன்று மகன்களுடன் அரளி விதையை அரைத்துக் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கிருந்து 108 வாகனம் மூலம் நிலக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதில் கதிரேசன் என்ற 8 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார் செல்வி உற்பட மூன்று பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பற்றி நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!