17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேவிபட்டினத்தில் இண்டேன் காஸ் ஏஜன்ஸி திறப்பு ..

தேவிபட்டினத்தில் இண்டேன் காஸ் ஏஜன்ஸி திறப்பு ..

எழுதியவர்: ஆசிரியர் February 11, 2019, 7:32 pm

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம்கிருஷ்ணா குழுமம் சார்பில் நிகில் கிருஷ்ணா இண்டேன் கிராமின் விட்ராக் திறப்பு விழா நடந்தது. இராமநாதபுரம் மாவட்டம் தேவி பட்டினம் பிள்ளையார் கோயில் தெருவில் நடந்த நிகழ்ச்சிக்கு தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி சேர்மன் மாதவனூர் எம்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்தியன் ஆயில் நிறுவன முதுநிலை (மதுரை எல்பிஜி விற்பனை) வி.என்.பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். இந்தியன் ஆயில் நிறுவன துணை பொது மேலாளர் (மதுரை எல்பிஜி விற்பனை) வி.நாகராஜன் ஷோ ரூமை திறந்து வைத்தார். இந்தியன் ஆயில் நிறுவன முதுநிலை திட்ட மேலாளர் (இளையான்குடி எல்பிஜி விற்பனை) என்.ஆர்.கணேஷ் கிட்டங்கியை திறந்து வைத்தார்.

இந்தியன் ஆயில் நிறுவன (மதுரை எல்பிஜி விற்பனை) மேலாளர் எம்.தியாகராஜன், உதவி மேலாளர் எஸ். ராஜ மீனாட்ஷி ஆகியோர் வாழ்த்தி பேசினார். ராமநாதபுரம் மாவட்ட இண்டேன் காஸ் விநியோகஸ்தர் சங்க மாவட்ட செயலாளர் பிஆர்என் ராஜாராம் பாண்டியன், ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் நிர்வாகி பிஆர்என் முத்துராமலிங்கம், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த் (ஆர் எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர்) ரோட்டரி சங்க நிர்வாகிகள் தினேஷ் குமார், ரமேஷ், ஏவிஎம்எஸ் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி தாளாளர் ஜெயக்குமார், வழக்கறிஞர் முனியசாமி, கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டோருக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. ஷோ ரூம் உரிமையாளர் கேசவ கண்ணன் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!