17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் வாக்கு சீட்டு இயந்திரம் செயல் முறை விளக்கம்…..

கீழக்கரையில் வாக்கு சீட்டு இயந்திரம் செயல் முறை விளக்கம்…..

எழுதியவர்: ஆசிரியர் February 10, 2019, 3:21 pm

கீழக்கரை ஹைரத்துல் ஜலாலியா மேல்நிலைப் பள்ளியில் இன்று ( 10.02.19.) தேர்தலில் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது பற்றிய செயல்முறை விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

கீழக்கரை தாலுகா மண்டல தாசில்தார் ஜலாலுதீன், கீழக்கரை வருவாய் ஆய்வாளர் சாராதா ஆகியோர் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிடத்தவுடன், நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அங்கிருக்கும் ஓர் இயந்திரத்தின் திரையில் (5செகண்ட் வரை) காணவும், அதனுடய ஓப்புகை சீட்டு  அந்த இயந்திரத்தில் விழும் விதத்தை  பற்றியும், அரசியல் கட்சி சார்ந்த வேட்பாளர்களின் சின்னங்கள்,  மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் சார்ந்த சின்னங்களை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர்கள் அறிந்து கொள்வது பற்றியும், அதன் செயல்முறை பற்றியும் விளக்கி கூறப்பட்டது.

இன்று கீழக்கரையிலுள்ள 13 ஓட்டுச்சாவடிகளுக்கும், வருகின்ற 13ம் தேதி வரை கீழக்கரையில் அனைத்து இடங்களில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் செயல்முறை விளக்கம் அளிக்க உள்ளதாகவும் தெரிவிக்கபட்டது.

தகவல்:- மக்கள் டீம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!