18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் தினைக்குளம் அரசு பள்ளி அவல நிலையை கண்டித்து SDPI கட்சி உண்ணாவிரத போராட்டம்…

இராமநாதபுரம் தினைக்குளம் அரசு பள்ளி அவல நிலையை கண்டித்து SDPI கட்சி உண்ணாவிரத போராட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் February 10, 2019, 1:02 pm

இராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத பொதுப்பணித் துறை நிர்வாகத்தை கண்டித்து சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா இணைந்து அனைத்து கட்சி உண்ணாவிரத போராட்டம் இன்று (10/02/19 நடந்தது. திருப்புல்லாணி எஸ் டி பி ஐ கட்சி நகர் தலைவர் எஸ் முகமது குது புதீன் தலைமை வைத்தார்.

தினைக்குளம் சுற்றுவட்டார கிராம தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட எஸ்டிபிஐ., கட்சி துணைத்தலைவர் சோமு வரவேற்றார். தினைக்குளம் ஜமாத் செயலாளரும் கிழக்கு மாவட்ட பொருளாளர் எம்.முகமது ரபீக், தினைக்குளம் ஊராட்சிதிமுக செயலாளர் கே. பிச்சைமணி, தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே.ஜாகீர் உசேன், சோசியல் டெமாக்ரடிக் தொழிற்சங்கத் தலைவர் எஸ்.முஸ்தாக் அகமது, நாம் தமிழர் கட்சி மாவட்ட பொருளாளர் காயாம்பு, எஸ்டிபிஐ., கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் என்.வண்ணை அஸ்கர் அலி ஆகியோர் பேசினர்.

தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி, எஸ்டிபிஐ., கிழக்கு மாவட்ட தலைவர் ஏ. அப்துல் வஹாப், பெரியார் பேரவை தலைவர் க.நாகேஸ்வரன், தமிழ்புலிகள் மாவட்ட செயலாளர் மு. தமிழ் முருகன், திருப்புல்லாணி ஒன்றிய காங்கிரஸ் தலைவர் என்.சேதுபாண்டியன், திருப்புல்லாணி ஒன்றிய மதிமுக செயலாளர் ஆர்.ரெத்தினக்குமார் ஆகியோர் எழுச்சியுரை ஆற்றினார்.

இராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப.த திவாகரன், அமமுக., மாவட்ட செயலாளர் வ.து.ந. ஆனந்த், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ். முருகபூபதி, எஸ்டிபிஐ., கட்சி கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் செய்யது இபுராகிம், கிழக்கு மாவட்ட செயலாளர் செ.பைரோஸ்கான், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா செயற்குழு உறுப்பினர் எஸ்.ரியாஸ்கான், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் க.சகுபர் சாதிக், தினைக்குளம் ஜமாத் தலைவர் எஸ்.முகமது அலி ஜின்னா ஆகியோர் கண்டன உரையாற்றினர். எஸ்டிபிஐ.,கட்சி மாநில செயலாளர் ரெத்தினம் அண்ணாச்சி சிறப்புரை ஆற்றினார். ராமநாதபுரம் தொகுதி தலைவர் எஸ். அசன் அலி உட்பட பலர் பங்கேற்றனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!