17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விழுப்புரம் காவேரி தொலைக்காட்சி செய்தியாளர் சதீஸ் குமார் மீதான தாக்குதலுக்கு “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்” கடும் கண்டனம்..

விழுப்புரம் காவேரி தொலைக்காட்சி செய்தியாளர் சதீஸ் குமார் மீதான தாக்குதலுக்கு “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்” கடும் கண்டனம்..

எழுதியவர்: ஆசிரியர் February 10, 2019, 12:08 pm

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற காவேரி நியூஸ் செய்தியாளர் சதீஸ் குமார் மீது, செய்தி மக்கள் தொடர்பு துறையில் பணியாற்றும் வீரமணி என்பவர், கத்தியால் தாக்கியதாகவும், தாக்குதலுக்கு ஆளான சதீஸ் குமார் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் செய்தி அறிந்தோம்.

பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்திய நபர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பத்திரிகையாளர்களை பல்வேறு வகையில் பாதுகாத்திட, விரைவில் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சட்டம் அமைக்க வேண்டும் என்றும் அரசிடம் தொடர்ந்து நாம் வலியுறுத்தி வருகின்றோம். பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு தற்போது நடைபெற்று வரும் மானியக்கூட்டத்திலாவது பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். இனி இது போன்ற தாக்குதல்கள் நடைபெறா வண்ணம் தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வறிக்கையை WJUT -“Working journalists Union of Tamilnadu.”- “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்” மாநில இணைச் செய்தியாளர் ஜெ.அஸ்கர் வெளியிட்டுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!