இராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஓஎன்ஜிசி மற்றும் ஹெல்பேஜ் இந்தியா சார்பில் இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம் நடந்தது. கிராமத் தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
அரசு உயர்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க முன்னாள் தலைவரும், வாலாந்தரவை ஊராட்சி முன்னாள் உறுப்பினருமான பி.செல்வம், அண்ணா நகர் எஸ்.புல்லாணி, முக்கிய பிரமுகர்கள் டி.முனியசாமி, ஜி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். இருதயம், கண், காது, மூக்கு, தொண்டை, ரத்த அழுத்தம் தொடர்பாக இலவச பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை, மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது.
மருத்துவர்கள் துளசி பிருந்தா (மகப்பேறு), பிரியங்கா (எலும்பு முறிவு ), ஹேமா பிரீத்தியா (பொது மருத்துவம்) ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஹெல்பேஜ் இந்தியா மாநில தலைமை பொறுப்பாளர் சிவக்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.













You must be logged in to post a comment.