17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொது மக்களுக்கு காவல்துறையினர் முன்மாதிரியாக திகழ வேண்டும்” S.P. முரளி ரம்பா காவலர்களுக்கு அறிவுறுத்தல்…

பொது மக்களுக்கு காவல்துறையினர் முன்மாதிரியாக திகழ வேண்டும்” S.P. முரளி ரம்பா காவலர்களுக்கு அறிவுறுத்தல்…

எழுதியவர்: ஆசிரியர் February 9, 2019, 9:34 pm

தூத்துக்குடி மாவட்ட காவல் வாகனங்கள் முறையாக  பராமரிக்கப்படுகிறதா என இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா  ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின் வாகன ஓட்டுனர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார் அவர் பேசுகையில், “ இரு சக்கர வாகனம் ஓட்டும் காவல்துறையினர் கண்டிப்பாக  தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிந்து ஓட்ட வேண்டும். விபத்து ஏற்படாத வகையில்  வாகனம் ஓட்ட வேண்டும். செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது. காவலர்கள் பணி நேரத்தில் செல்போன் உபயோகிக்க கூடாது.

நாம் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் பேரணிகள் நடத்தி வருகிறோம். முதலில் நாம்  சாலை போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்து பொது மக்களுக்கு  முன்மாதிரியாக திகழ வேண்டும். அவ்வாறு கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!