17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலை போக்குவரத்து பிரச்சனையா ? 94981 81457 என்ற எண்ணுக்கு புகாரளிக்கலாம் S.P. முரளி ரம்பா அறிவிப்பு..

சாலை போக்குவரத்து பிரச்சனையா ? 94981 81457 என்ற எண்ணுக்கு புகாரளிக்கலாம் S.P. முரளி ரம்பா அறிவிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் February 9, 2019, 4:23 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை போக்குவரத்து சம்மந்தமான பிரச்சனைகளுக்கு பொதுமக்கள் புகாரளிக்க செல்போண் எண் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து சம்மந்தமாக ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டாலோ, போக்குவரத்தில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டாலோ அல்லது சாலை விபத்துக்கள் ஏற்பட்டாலோ, சாலை போக்குவரத்து சம்மந்தமாக எவ்வித குற்றங்கள் நடந்தாலும் பொதுமக்கள் தங்கள் புகார்கள் அல்லது தகவல்களை 94981 81457 என்ற செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பார்கள். ஆகவே இந்த செல்போன் எண்ணை பொது மக்கள் தங்களுக்கு தேவைப்படும் தருணத்தில் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.”  என மாவட்ட எஸ்பி., முரளி ரம்பா, தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வின் போது டி.எஸ்.பி.பொன்ராமு, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் ,மற்றும் செய்தி ,மக்கள் தொடர்பு, அதிகாரி சத்திய நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!