17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் KG மாணவர்களின் சிகப்பு கலர் நாள் மற்றும் குழந்தைகள் கொண்டாட்டம்…

இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் KG மாணவர்களின் சிகப்பு கலர் நாள் மற்றும் குழந்தைகள் கொண்டாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் February 8, 2019, 3:58 pm

இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் LKG மற்றும் UKG மாணவர்களுக்கு இடையில் சிகப்பு கலர் நாள் மற்றும் குழந்தைகள் கொண்டாட்டம் பள்ளி முதல்வர் தலைமையில் திரு.எஸ்.நந்தகோபால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

​ பள்ளியில் KG படிக்கும் மாணவர்கள் அனைவரும் சிகப்பு வர்ண ஆடைகள் அணிந்தும், தாங்கள் வீட்டில் விளையாட்டிற்கு பயன்படுத்திய சிகப்பு வர்ண அனைத்து விளையாட்டு பொருட்களை கொண்டு வந்து அனைவருடன் கூடி விளையாடி மகிழ்ந்தனர். KG மாணவர்கள் சிகப்பு வண்ண ஆடையிலும், விளையாட்டு பொருட்களுடனும் சேர்த்து ஒன்றாக கூடி புகைப்படம் எடுத்துக் கொண்ட பொழுது பள்ளி மாணவர்கள் அனைவரும் தங்களுடைய பழைய நினைவுகளை எண்ணி ஒருவருடன் ஒருவர் மனம் மகிழ்ந்து பெருமைபட்டனர். ​மேலும் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கிடையே கலைநிகழ்ச்சிகள், பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டிகள் நடைபெற்றது. இதில் சிறப்பாக செயல்பட்டு தங்களுடைய தனித்திறன் வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு உறுதுணையாக மாணவர்களை பள்ளிக்கு வருகைபுரிய வைத்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை பள்ளி முதல்வர் மிகவும் பாராட்டினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!