18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு பஸ்நிலையத்தில் உள்ள பொதுகழிவறை சுகாதாரமற்ற முறையில் தூர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்..

பாலக்கோடு பஸ்நிலையத்தில் உள்ள பொதுகழிவறை சுகாதாரமற்ற முறையில் தூர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்..

எழுதியவர்: ஆசிரியர் February 4, 2019, 9:34 pm

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ்நிலைத்திற்கு தினதோரும் 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்லுகின்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினதோரும் பல்வேறு வேலைகளுக்கும், வெளியூர்களுக்கும் சென்று வருகின்றனர்.  இங்கிருந்து பெல்ரம்பட்டி, ஆத்துக்கொட்டாய், அமானிமல்லாபுரம், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, ஜக்கசமுத்திரம் மற்றும் காரிமங்கலம், காவேரிப்பட்டிணம் ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் இரவு பகலாக வந்து செல்லுகின்றனர்.

பஸ்நிலையத்தில் செல்பட்டு வரும் பொதுகழிவறை சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் ஆண்கள் மற்றும் பெண்கள் முகம் சூழிக்கும் சூழல் உள்ளது. மேலும் கழிவறை பகுதியில் மதுபாட்டிகள், சிகரெட் துண்டுகள், புகையிலை பொருட்கள் தேங்கி கிடப்பதால் தூர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இது குறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திற்க்கு புகார் அளித்தும் மெத்தன போக்கை கடைபிடித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொதுகழிவறையை சீர்படுத்த வேண்டும் என பேருந்து பயணிகள் கோரிக்கை வைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!