17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை வடக்குத் தெரு அல் மதரஸத்துல் முஹம்மதியாவில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி..

கீழக்கரை வடக்குத் தெரு அல் மதரஸத்துல் முஹம்மதியாவில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் February 4, 2019, 7:18 pm

கீழக்கரை வடக்குத்தெருவில் அமைந்துள்ள வடக்குத்தெரு சமூக நல அமைப்பு நாசாவின் கீழ் இயங்கும் அல் மதரஸத்துல் முஹம்மதியாவில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி 3/2/19 ஞாயிற்றுக்கிழமை மதரஸா வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய அழைப்பாளர் மௌலவி.முஜாஹித் இப்னு ரஸீன் மற்றும் மௌலவி.அப்பாஸ் அலி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் மார்க்க சொற்பொழிவிற்கு  பிறகு, அது சம்பந்தமாக  மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் பதில் சொன்னார்கள்.

மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டை மதரஸாவின் நிர்வாகிகளான பஷீர், முஸ்ஸம்மில், அஸ்கர், முஃபீத்  ஆகியோர் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!