17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒரு நிமிடத்தில் 40 நாடுகளின் பெயரை கூறும் 2 வயது சிறுமி… வில் மெடல் உலக சாதனை படைத்தார்.

ஒரு நிமிடத்தில் 40 நாடுகளின் பெயரை கூறும் 2 வயது சிறுமி… வில் மெடல் உலக சாதனை படைத்தார்.

எழுதியவர்: ஆசிரியர் February 4, 2019, 6:28 pm

மதுரையில் ஒரு நிமிடத்தில் 40க்கும் மேற்பட்ட நாடுகளின் பெயர்களையும் கொடிகளையும் கூறி ரெக்கார்டு சாதனை படைத்த 2 வயது சிறுமி ராஜபாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன், திவ்யா  பிரபா  தம்பதியின் ஒரே மகளான காவ்யஸ்ரீ இரண்டு வயது நிரம்பிய இவர் சிறுவயது முதலே படுசுட்டியாக இருந்துள்ளார்.

சிறுமி ஒன்றரை வயதிலேயே ஒரு முறை சொல்லிக் கொடுப்பதை அப்படியே கூறுவது, அனைத்து கலர் பெயர்கள் சொல்வதை கண்ட பெற்றோர்கள் அனைத்து நாடுகளின் கொடிகள் பொரித்த அட்டையை வீட்டின் சுவற்றில் மாட்டி சிறுமியிடம் கேட்க ஆரம்பித்தனர்.

அனைத்து நாட்டினுடைய பெயர் கூறி வருவதை கண்டு வியத்தகு திறமையை பாராட்டி இவளுக்கு இராமநாதபுரத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் Will Medal of World Record அமைப்பு உலக சாதனைக்கான அங்கீகார மெடல் மற்றும் சாதனை சான்றிதழ்  வழங்கி  கௌரவித்துள்ளனர்.

மெடல் மற்றும் சான்றிதழை பெற்ற சிறுமியின் பெற்றோர் கூறும் போது, “காவியாஸ்ரீ ஒன்றரை வயது இருக்கும்போதே வீட்டில் உள்ள அனைத்து கலர்களின் பெயர்களை கூறினார். அவளுக்கு ஏதோ தனிப்பட்ட திறமை இருப்பதை உணர்ந்த நாங்கள் அனைத்து நாடுகளின் கொடிகள் பொரித்த அட்டையை வாங்கி வீட்டில் மாட்டி வைத்தோம். ஒரு முறை சொல்லிக் கொடுத்தோம் அதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு அவர் எப்படி கேட்டாலும் அந்த அந்த நாடுகளுடைய பெயர்களைக் கூறி அசத்தினார் நாட்டின் பெயரை சொல்லும் போது கொடிகளை காட்டி அசத்தினார்.

இந்த சிறுமியின் தனிப்பட்ட திறமையை பார்த்து ரெக்கார்டாக பரிந்துரை செய்தோம் இவளுக்கு மெடல் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் என்ற ரெக்கார்டு வழங்கினர். மேலும் இவளுக்கு திருக்குறள் 1330 வேகமாக சொல்ல வைப்பது மற்றும் அவருடைய ஞாபகசக்தியை இன்னும் அதிகரித்து பல்வேறு ரெக்கார்ட் படைக்க நாங்க உறுதுணையாய் இருப்போம் என சிறுமி காவியாஸ்ரீ தாயார் திவ்ய பிரபா”  கூறினார்.

செய்தி வி.காளமேகம் மதுரை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!