18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கல்வியாளர்களை ஊக்குவிக்கும் கீழக்கரை நகர் நல இயக்கம்….தீனியா பள்ளி செயல்பாட்டுக்கு கௌரவம்..

கல்வியாளர்களை ஊக்குவிக்கும் கீழக்கரை நகர் நல இயக்கம்….தீனியா பள்ளி செயல்பாட்டுக்கு கௌரவம்..

எழுதியவர்: ஆசிரியர் February 4, 2019, 4:58 pm

கீழக்கரையில் இயங்கி வரும் கீழக்கரை நகர் நல இயக்கம் கீழக்கரையின் மேம்பாட்டுக்காக பல் வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வருகிறது. சமூக பணியோடு நின்று விடாமல் கல்வியின் மேம்பாட்டுக்காகவும் பல் வேறு ஊக்கப்பணிகளை இவ்வமைப்பு செய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கீழக்கரை தீனியா பள்ளி செய்து வரும் கல்விக்கான சேவையை கௌவரவிக்கும் விதம் கீழக்கரை நகர் நல இயக்கம் மற்றும் Sandwich Cafe இணைந்து தீனியா பள்ளியின் தாளாளர் அத்திக் அவர்களுக்கு “BEST MOTIVATOR” என்ற விருதை வழங்கினர். மேலும் தீனியா பள்ளியின் கல்விக் குழு தலைவருக்கு பொண்ணாடை போத்தி கௌரவிக்கப்பட்டது.

இந்த விருதை பற்றி கீழக்கரை நகர் நல இயக்கதின் நிர்வாகி பசீர் மரைக்கா கூறுகையில், ” கீழக்கரை நகர் நல இயக்கம் கல்வியின் தரத்தை உயர்த்தவும் மேம்படுத்தவம் பல் வேறு ஊக்கப்பணிகளை செய்து வருகிறது. அதன் வரிசையில் கடந்த சில வருடங்களாக தீனியா பள்ளி நிர்வாகம் கல்வியை மேம்படுத்துவதற்காக செய்து வரும் பணியை கௌரவிக்கும் வண்ணம் இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!