17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஸ்டெர்லைட் தீர்ப்புக்கு பின் மேல் நடவடிக்கை :தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி..

ஸ்டெர்லைட் தீர்ப்புக்கு பின் மேல் நடவடிக்கை :தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி..

எழுதியவர்: ஆசிரியர் February 4, 2019, 4:35 pm

ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கில் நாளை நீதிமன்றத்தில் தீர்ப்பு வரவுள்ளது. தீர்ப்புக்குப் பின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும், ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்.

வாரம்தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில நடைபெறும் மக்கள் குறைதீர்ககும் நாள் கூட்டம் இன்று தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி மாவட்டம் முழுவதும் நீர் நிலைகள் அனைத்தும் 75 சதவீதம் மட்டுமே நிரம்பியுள்ளது, தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் 18 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளதே அதற்க்கு காரணம்  பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வையாறு நீர்த்தேக்கங்களில் போதுமான நீர் இருப்பு உள்ளதால் ஜூன் மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.இதனால் மாவட்டத்தில் வறட்சி பாதிப்பு எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை.மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்த பின்னர், விவசாயத்திற்கு நீர் வழங்கப்படும்.

கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை மூலம் ரூ.10கோடி செலவில் அழ்துளை கிணறு அமைத்தல், பம்புகளை சரிபார்த்தல், புதிதாக குடிநீர் இணைப்பு போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. மேலச்செக்காரக்குடி கிராமத்தில் விவசாய நிலங்களில் காற்றாலை அமைக்கப்படுவதாக வந்த புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விவசாய நிலங்களிலோ, நீர்நிலைகளிலோ காற்றாலை அமைக்கப்பட்டிருந்தால் அதனை அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

மேலும் அவர் கூறுகையில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் பதிவு செய்யப்படாத விசைப் படகுகள் கடலுக்குச் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மீன்துறை இணை இயக்குநர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, விசைப்படகு உரிமையாளர்களுடன் பேச்சுவார்ததை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் கழிவுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நாளை நீதிமன்றத்தில் தீர்ப்பு வரவுள்ளது. தீர்ப்புக்குப் பின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். என்று ஆட்சியர் தெரிவித்தார்,. பேட்டியின் போது உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!