கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை வித்யவிகாஸ் மெட்ரிக் பள்ளியில் இன்று 4/02/2019 காலை 7.40 am மணியளவில் பள்ளிக் குழந்தைகளை ஏற்ற வந்த வேன் ஓட்டுனர் குடிபோதையில் வண்டி ஓட்டியதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
பொது மக்கள் மற்றும் பெற்றோர்கள் ஆவேசமடைந்து ஓட்டுனர் மற்றும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 4 நாட்களில் இது இரண்டாவது நிகழ்வாக உள்ளது. தமிழக அரசின் கல்வித் துறையும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்







You must be logged in to post a comment.