17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சேத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சுகாதாரமற்ற அபாயநிலை…

சேத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சுகாதாரமற்ற அபாயநிலை…

எழுதியவர்: ஆசிரியர் February 4, 2019, 2:01 pm

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுகா சேத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவு நீர்  வாறுகாலில் நீர் தேங்கி நிற்கும் அவலநிலை காணப்படுகிறது. வாறுகால்களில் நோய்கள் பரவும் வண்ணம் நோய்த்தடுப்பு மருந்துகள் தெளிக்காததாகவும், ஆக்கிரமிப்புகள் நிறைந்தும், கொசு மருந்து தெளிக்காத நிலையிலும், சுகாதாரமற்று காணப்படுகிறது.

குடிநீர் குழாய்கள் ஆதிபுத்திரங் கொண்ட அய்யனார் கோவில் டேங்க் முதல் மேட்டுபட்டி வரை (பைப் லைனில் 53 இடங்களில் கசிவு) சேதத்தினாலும்,13 இடங்கள்கள் ஜாய்ண்ட் சரிவர இல்லாத நிலையில் மற்றும் பஸ் நிலையம் அருகில் சாக்கடைநீர், குடிநீருடன் கலந்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற சுகாதாரமற்ற நிலை நிலவுவதால் உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்பும் இப்பகுதியில் நிலவி வருகிறது. இருப்பினும் பொதுமக்கள்  உயிர் இழந்தாலும் பரவாயில்லை என இப்பகுதியில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வி பொதுமக்களின் மனதில் எழுகிறது.

இந்நிலைகளை கருத்தில் கொண்டு இப்பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து எடுக்குமாறு சமூக ஆர்வலர்களான சேத்தூர் M.கணேசன்,கடலூர் ஆ.வைத்தியநாதன், ஆகியோர் பொதுநலன் கருதி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!