17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது 21.200 கி.கி கஞ்சா பறிமுதல்…

கஞ்சா விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது 21.200 கி.கி கஞ்சா பறிமுதல்…

எழுதியவர்: ஆசிரியர் February 3, 2019, 9:35 pm

நேற்று (02.02.2019) மதுரை E3 அண்ணாநகர் ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. திலீபன் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை பாண்டி கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் கையில் சிவப்பு நிற பேக் மற்றும் வெள்ளை நிற பையுடன் நின்றுகொண்டிருந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, கொக்குடையான்பட்டியைச் சேர்ந்த பாலுச்சாமி மகன் பாலகிருஷ்ணன் 44/19 மற்றும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, கறுப்புக்கோவிலைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவருடைய மனைவி லாவண்யா 30/19 ஆகிய இரண்டு நபர்களும் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 21.200 கிலோ கிராம் கஞ்சா, மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.20,000/- ம் கைப்பற்றப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!