18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு முகாம் 110 மாணவர்கள் தேர்வு..

கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு முகாம் 110 மாணவர்கள் தேர்வு..

எழுதியவர்: ஆசிரியர் February 3, 2019, 5:03 pm

கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் சென்னையில் உள்ள   எ.வி.எஸ். லுகாஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் இறுதியாண்டு பயிலும் மின்னியல், மின்னணுவியல் மற்றும் கணிதத்துறை மாணவ, மாணவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில் கல்லூரியின் முதல்வர் அலாவுதீன் தலையுரையாற்றினார். கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் ஜெ.கணேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.  இந்நிகழ்வில் கல்லூரியின் பல்வேறு துறைத்தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் கல்லூரியின் துணை முதல்வர்கள் சேக்தாவூது மற்றும் இராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக சென்னை நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத்துறை மேலாளர் ஆர்.விஸ்வநாதன் நேர்முகத் தேர்வினை நடத்தினார்.

மேலும் இந்த முகாமில் கலந்து கொண்ட 150கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வருட  ஊதியம் ரூ.1,44,000/- மற்றும் மற்றும் தங்கும் வசதி, போக்குவரத்து வசதியுடன் வேலைக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டது.

செய்தி:- கார்த்தி, கீழக்கரை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!