17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வழிதவறி சென்ற 3 வயது சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பு..

வழிதவறி சென்ற 3 வயது சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பு..

எழுதியவர்: ஆசிரியர் February 3, 2019, 3:21 pm

மதுரை கிரைம் பிரான்ச் காவலர் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள உணவகத்தின் வெளியில் ஒரு பெண் குழந்தை அழுதுகொண்டிந்ததால் உணவகத்தில் பணிபுரியும் பாலாஜி என்பவர் அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம் (தெற்கு) காவல் ஆய்வாளர் திருமதி.முருகேஸ்வரி அவர்களுக்கு தகவல் தெரிவித்ததார்.

காவல் ஆய்வாளர்  குழந்தையை மீட்டு விசாரணை செய்ததில் குழந்தையின் பெயர் ரிதன்யா என்றும் குழந்தையின் தகப்பனார் மதுரையை சேர்ந்த C.V.விக்னேஷ் பாபு என்பதும் தெரிய வந்தது. மேலும் குழந்தையின் தகப்பனாரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் குடும்பத்துடன் மதுரை மாநகர் தெற்கு மாசி வீதில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த இடத்தில் குழந்தை ரிதன்யா விளையாடிக்கொண்டிருந்த போது பாதை மாறி சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.

காவல் ஆய்வாளர் திருமதி.முருகேஸ்வரி அவர்கள் குழந்தையின் பெற்றோரிடம் உரிய ஆவணங்களை சரிபார்த்து குழந்தை பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. பெற்றோர்கள் குழந்தையை மீட்டுக்கொடுத்ததால் மதுரை மாநகர் காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!