தூத்துக்குடி தெப்பக்குளம் அருகே உள்ள எம்ஜிஆர் காலனியில் முனியசாமி கோயில் உள்ளது. கோவிலின் பூசாரி ராமசுப்பு என்பவர் நேற்று இரவு 8 மணி அளவில் பூஜைகளை முடித்து விட்டு கோவிலை பூட்டிச் சென்றுள்ளார்.
இன்று காலை கோவில் நடை திறந்து பார்த்தபோது கோவில் வளாகத்தில் உள்ள இரண்டு உண்டியல்கள் மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் உண்டியலில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த வேஷ்டியை உடுத்திக் கொண்டு, தான் உடுத்தியிருந்த கைலியை அவிழ்த்து அங்கேயே விட்டு சென்றுள்ளான் கொள்ளையன். இது குறித்து மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடிவருகின்றனர்.




You must be logged in to post a comment.