18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டை பிரிவு அருகே லாரி கவிழ்ந்து விபத்து..

ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டை பிரிவு அருகே லாரி கவிழ்ந்து விபத்து..

எழுதியவர்: ஆசிரியர் February 3, 2019, 11:29 am

திண்டுக்கல் – வத்தலக்குண்டு தேசிய நெடுஞ்சாலையில் வீரசிக்கம்பட்டி பிரிவு அருகில் உள்ள சிப்ஸ் கம்பெனியில் கர்னாடக மாநிலத்தை சேர்ந்த கணரக வாகனம் (லாரி) சிப்ஸ் லோடு ஏற்றிக்கொண்டு இரவு நெடுஞ்சாலையில் லட்சுமிபுரம் அருகே சுமார் இரவு 11 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது சாலையில் உள்ள வேகத்தடுப்பில் எதிரே வந்து கொண்டிருந்த காருக்கு வழிவிடும் வகையில் ஓட்டுநர் லாரியை திருப்பியதாக கூறப்படுகிறது. அப்பொழுது ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பட்டி காவல்துறையினர் போக்குவரத்தை சீர்படுத்தினர். மேலும், விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!