திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள முத்துராமன் பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் ஆனந்த கிருஷ்ணன் வயது 22 ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ரெட்டியபட்டி சேர்ந்த ரங்கசாமி மகன் மகேந்திரன் வயது 22 இருவரும் முத்துகாமன்பட்டியில் இருந்து நிலக்கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிடுத்த போது கார் மோதி விபத்து.
சம்பவ இடத்திலேயே ஆனந்த கிருஷ்ணன் பலியான மற்றுமொருவர் பலத்தகாயத்துடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டார். இந்த கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நிலக்கோட்டை நால்ரோடு சாலை மறியலில் ஈடுபட்டனர் உடனடியாக காவல் ஆய்வாளர் சங்கரேஸ்வரன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார் ஊர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மேலும் நிலக்கோட்டை காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய வாகனத்தையும் அதைத் தொடர்ந்து மோதிய அரசு பஸ்யையும் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றார்.







You must be logged in to post a comment.