17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலங்கைக்கு கடத்த இருந்த 180 கிலோ கடல் அட்டை பறிமுதல் ..

இலங்கைக்கு கடத்த இருந்த 180 கிலோ கடல் அட்டை பறிமுதல் ..

எழுதியவர்: ஆசிரியர் February 1, 2019, 3:15 pm

இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் அருகே தலைதோப்பு பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டை கடத்த இருப்பதாக தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள தோப்பு ஒன்றில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதப்படுத்திய 180 கிலோ கடல் அட்டை மூடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட கோபு(40) என்பவரை கைது செய்து மண்டபம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டையின் சர்வ தேச மதிப்பு 9 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!