17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » செயின்ட் தாமஸ் கோப்பைக்கான மாவட்ட கூடைப்பந்து போட்டி : வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார் S.P. முரளி ரம்பா..

செயின்ட் தாமஸ் கோப்பைக்கான மாவட்ட கூடைப்பந்து போட்டி : வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார் S.P. முரளி ரம்பா..

எழுதியவர்: ஆசிரியர் February 1, 2019, 11:00 am

செயின்ட் தாமஸ் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி, தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 29 .01. 2019 முதல் 31 .01 .2019 வரை 3 நாட்கள் நடைபெற்றது, அதன் இறுதிப்போட்டி நேற்று 31 1 2019 இரவு நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கூடைப்பந்து இறுதிப் போட்டியை துவக்கி வைத்து விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி பேசினார் , பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இப்போட்டியில் 12 மாணவர் அணிகளும், நாலு மாணவியர் அணிகளும் பங்கேற்றன.இவ்விழாவில் பள்ளி தாளாளர் அருட்தந்தை ஜூலியஸ் மார்லஸ் ஜோஷி, பள்ளி முதல்வர் ஆஸ்கர், தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் தலைவர், வி.வி.டி .பரமானந்தம், தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் உதவி தலைவர், மற்றும் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து செயலாளர் சுரேஷ் ராஜா, சுந்தரம், மகாராஜன், உடற்கல்வி ஒருங்கிணைப்பாளர் சேவியர், உடற்கல்வி ஆசிரியர்கள் தினேஷ், மாமூல் ராஜா ,முத்துமாரியப்பன், மற்றும் சிலம்பரசன்,காவல் ஆய்வாளர் கோகிலா, சார்பு ஆய்வாளர்கள் வேல்ராஜ், ராஜாமணி, ஞானராஜ், தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் பேச்சிமுத்து ,மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர், மயிலேறும்பெருமாள், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!