மதுரை விளக்குத்தூண் போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் ஒழுங்கு பிரிவில் எஸ்.ஐ., ஆக பணியாற்றி வருவபவர் செல்வராஜ். முனிச்சாலை இஸ்மாயில்புரம் 6வது தெருவில் சிலர் போக்குவரத்திற்கு இடையூறு செய்தனர்.
இதனை செல்வராஜ் தட்டிக்கேட்டார். அப்போது, மர்ம நபர்கள் சிலர் லெ்வராஜை கத்தியால் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த எஸ்.ஐ.,செல்வராஜ் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எஸ்.ஐ., மீது தாக்குதல் நடத்திய கும்பலை பிடிக்க, நகர் உதவிகமிஷனர் உதயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர்.
செய்தி:- வி.காளமேகம்.




You must be logged in to post a comment.