17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராணிப்பேட்டை அடுத்த திருவல்லம் அரசு சித்த மருந்தாளர் கோவிந்தசாமிக்கு பணி நிறைவு பாராட்டு விழா…

ராணிப்பேட்டை அடுத்த திருவல்லம் அரசு சித்த மருந்தாளர் கோவிந்தசாமிக்கு பணி நிறைவு பாராட்டு விழா…

எழுதியவர்: ஆசிரியர் January 31, 2019, 5:38 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவல்லம் ஆரம்ப அரசு சுகாதார வளாகத்தில் உள்ள சித்தா பிரிவில் சிறப்பு நிலை மருந்தாளராக கடந்த 3 4 – ஆண்டுகளாக பணிபுரிந்த டி.கோவிந்தசாமி ஜனவரி 31-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பாராட்டு விழா சித்தா பிரிவு வளாகத்தில் நடந்தது. ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் சங்கர் கணேஷ் தலைமை தாங்கினார். சித்த மருத்துவர் மல்லிகா முன்னிலை வகித்தார். மருத்துவர் ராணி நிர்மலா ‘கண் மருத்துவ உதவியாளர் ஆர்.பாபு மருந்தாளர் சாமுண்டீஸ்வரி, மகேஸ்வரி சுகாதார ஆய்வாளர்கள் பூபதி, பழனி, பெருமாள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கல்புதூர் ஜனனி பில்டர் கிருபா நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் ஏற்புரையை மருந்தாளர் கோவிந்தசாமி வழங்கினார். திருவல்லம் சுகாதார வட்டார மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணி தொகுத்து வழங்கினார். சேனூர் சுகாதார ஆய்வாளர் எம்.ராஜ்குமார் நன்றி கூறினார்.

செய்தி:- வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!