17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் உட்கோட்டம் காவல்துறை மற்றும் வங்கி மேலாளர்களின் சிறப்பு கலந்தாய்வு கூட்டம்..

ஆம்பூர் உட்கோட்டம் காவல்துறை மற்றும் வங்கி மேலாளர்களின் சிறப்பு கலந்தாய்வு கூட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் January 30, 2019, 10:09 pm

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரோட்டரி ஹாலில் காவல்துறை சார்பில் வங்கி மேலாளர்களின் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டம் ஆம்பூர் நகர ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இதில் ஆம்பூர் கிராமிய ஆய்வாளர் கோகுல்ராஜ் பள்ளிகொண்டா ஆய்வாளர் கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் கலந்து கொண்டு பேசிய ஆம்பூர் உட்கோட்டம் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன் ஆம்பூர் உட்கோட்டம் பகுதியில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் இரவு காவலர்கள் பணி அமர்த்த வேண்டும்,அனைத்து வங்கிகளிலும் தரமான சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் வங்கி சுற்றிலும் மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என்றும் தமிழக அரசால் தமிழக காவல்துறையை அறிவித்துள்ள காவலர் ஆப் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஒவ்வொரு வங்கியில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் சிசிடிவி கேமரா உடன் அலாரம் பொருத்த வேண்டும் என்றும் பேசினார் இதில் ஆம்பூர் உட்கோட்டம் பகுதியில் உள்ள வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி:- வாரியார், வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!