17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் சாதிசமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்க உறுதிமொழியேற்பு விழா..

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் சாதிசமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்க உறுதிமொழியேற்பு விழா..

எழுதியவர்: ஆசிரியர் January 30, 2019, 10:05 pm

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் 30.01.19 இன்று காலை 11.00 மணியளவில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.ஜெயக்குமார் M.Sc (Agri) அவர்கள் தலைமையில் காவல் அலுவலர்கள் முதல் அலுவலக பணியாளர்கள் ஆகியோருடன் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கருத்தான சாதிசமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்க நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவேன் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களுடன் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

அதைதொடர்ந்து மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் தொழுநோய் இல்லாத இந்தியா உருவாக அனைவருடன் இணைந்து ஒத்துழைப்பேன் என்ற கருத்துடன் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!