18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாம்பன் கடல் பாறையில் மோதி நிற்கும் படகு ரயில் பாலத்தில் மோதும் அபாயம்..

பாம்பன் கடல் பாறையில் மோதி நிற்கும் படகு ரயில் பாலத்தில் மோதும் அபாயம்..

எழுதியவர்: ஆசிரியர் January 30, 2019, 8:11 pm

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில் காற்று வீசுவதால் கடலுக்கு செல்லாத படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாம்பன் தென் கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்த ரைசல் என்பவரது விசைப்படகு நேற்று முன் தினம் அதிகாலை கயிறு அறுந்து கடலில் உள்ள பாறையில் மோதி நின்றது. காற்று தொடர்ந்து வீசி வருவதால், பாறையில் மோதி நிற்கும் படகு நகர்ந்து ரயில் பாலத்தில் மோதும் அபாயம் நீடிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதே போல் கயிறு அறுந்த படகு ரயில் பாலத்தில் மோதியதில் பாலம் சேதமானது குறிப்பிடத்தக்கது. விபத்தை தவிர்க்க படகை மீட்கும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தி:- முருகன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!