முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 29/01/2019 அன்று காலை 12.00 மணியளவில் கணினி சங்கம் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியினை கணினி பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த முதலாமாண்டு மாணவி S.தல்பியா பானு இறைவணக்கத்துடன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர், அன்வர் ரொ ஷாஹின் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அத்துடன் கல்லூரி முதல்வர் Dr. A.R. நாதிரா பானு கமால் அவர்கள் சமூக வலைதளங்களில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை தவிர்க்க வேண்டும் என்றும், தன்னுடைய முகநூல், வங்கி சார்ந்த தன்விபரம், இரகசிய எண், கடவுச்சொல், மின்னஞ்சல் போன்றவற்றைப் பகிர்வதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும், திறன்பேசியினை பாதுகாப்பாக உபயோகிக்கவும் அறிவுரை வழங்கி தலைமையுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர் B. ரஷினா பேகம் M.E, M.B.A,( Ph.D), கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை இணைப் பேராசிரியை, முகம்மது சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை அவர்களுக்கு முகம்மது சதக் நிறுவனத்தின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருத்தினர் அவர்கள்,பெண்களின் பாதுகாப்புக்காக சமூக வலைதளங்களில் இருக்கும் பயன்பாட்டு வழிகாட்டியினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் எந்த வகையான பயன்பாட்டு வழிகாட்டியினை பயன்படுத்த கூடாது என்றும் அதனால் ஏற்படும் நன்மை,தீமைகள் பற்றியும் ஔிவில்லை படவீழ்த்தி மூலமாக மாணவிகள் புரிந்துக் கொள்ளும் வகையில் சிறப்புரையாற்றினார். கணினி துறையிலும், வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை சங்கத்தின் சார்பாகவும் நடைபெற்ற போட்டிகளில் பங்கு பெற்ற மாணவிகளுக்கு பரிசளித்து, சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.கணினி துறையைச் சார்ந்த P. பிரியங்கா, S.ரீனா பர்வின், அன்வர் ரொ ஷாஹின் இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தனர். இறுதியாக கணினி அறிவியல் துறைத் தலைவர் S.ரீனா பர்வின் நன்றியுரை நல்க இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.






















You must be logged in to post a comment.