18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாத பஸ் நிலையத்தை அகற்றி சாலையை சீரமைக்க மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை..

பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாத பஸ் நிலையத்தை அகற்றி சாலையை சீரமைக்க மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் January 29, 2019, 7:23 pm

நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், பூலாங்குளம் ஊராட்சி, அயோத்தியாபுரி பட்டணம், இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் முன்பாக உள்ள பயணிகள் நிழற்குடை உள்ளது. ஆனால் நீண்ட நாட்களாக பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லை. இப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த தேவையான கட்டிடங்கள் கட்டுவதற்கு இடையூறாக உள்ளதால் இதனை அகற்றுவதற்கும்,  மேலும் பள்ளியின் முன்பாக செல்லும் சாலை பள்ளியின் எல்கைக்குள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாலையின் தெற்கே அமைந்துள்ள இரண்டாவது மின்கம்பத்திற்கு தெற்கே தற்போது போடப்பட்டு வரும் அப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சாலையை போடவும் நடவடிக்கை எடுக்குமாறு பொதுநலன் கருதி மக்கள்வழிகாட்டி இயக்கம் சார்பில் M.ஞானசேவியர் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!