இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக சமூக விழிப்புணர்வு பயணம் கடந்த மூன்று மாதங்களாக அனைத்து ஒன்றியங்களிலும் மேற்கொள்ளப்பட்டது சமூக விழிப்புணர்வு பயணத்தில் கிராமசபையின் அவசியம், கிராம ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை இணையத்தில் எப்படி பார்த்து தெரிந்து கொள்வது, நமது வாக்கு விற்பனைக்கு அல்ல, 100 நாள் வேலை திட்டத்தில் நம் கிராமத்தில் செய்த பணிகள் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட வரவு செலவு , இலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்த இளைஞர்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை பற்றி இராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து ஒன்றிய மக்கள் பாதை பொறுப்பாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த சமூக விழிப்புணர்வு பிரச்சாரத்தின் பலனாக இன்று (26-1-2019) நடைபெற்ற இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிக்கு உட்பட்ட கிராமசபை கூட்டத்தில் அதிகமான இளைஞர்கள் தங்களது கிராம ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை தீர்மானங்களாக நிறைவேற்ற தொடங்கியுள்ளனர். தங்களது ஊராட்சியின் வரவு செலவு கணக்குகள் பற்றியும் அதிகாரிகளிடம் கேள்வி கேட்டு தெரிந்து கொண்டுள்ளனர்.
மக்கள் பாதை மூலம் சமூக மாற்றத்தை முன்னெடுக்க இளையோர் படை தயாராகிவிட்டது. மாற்றம் என்பது சொல் அல்ல செயல் என்பதை நமது செயல்களால் இனி வரும் காலங்களில் அனைத்து ஒன்றியங்களிலும் நிரூபிப்போம்.







You must be logged in to post a comment.