18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » முத்துபேட்டையில் மாணவர்கள் ரத்த தானம்..

முத்துபேட்டையில் மாணவர்கள் ரத்த தானம்..

எழுதியவர்: ஆசிரியர் January 29, 2019, 4:52 pm

இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை தூய காணிக்கை அன்னை ஆலய ஆண்டு விழாவை முன்னிட்டு, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளை, முத்துப்பேட்டை மோசே இளைஞர் மன்றம் சார்பில் ரத்த தான முகாம் முத்துப்பேட்டை குழந்தை யேசு மருத்துவமனையில் நடைபெற்றது.

மோசே இளைஞர் மன்ற ஒருங்கிணைப்பாளர் டி.அந்தோணி பிரிட்டோ வரவேற்றார். ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் எம் ராக்லேண்ட் மதுரம் தலைமை வகித்தார் .மோசே இளைஞர் மன்ற தலைவர் ஆசிரியர் ஆர். வியாகுலசந்தியாகு, ராமநாதபுரம் சவரி கம்ப்யூட்டர்ஸ் உரிமையாளர் எஸ். ஜெர்மான்ஸ் முன்னிலை வகித்தனர். முத்துப்பேட்டை பங்கு தந்தை ஜி. அந்தோணிராஜ் முகாமை துவக்கி வைத்தார். ரத்த தானம் செய்த மாணவர்களுக்கு ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் எஸ்.ஹாரூன் சான்றிதழ் வழங்கினார். ரெட் கிராஸ் சொசைட்டி பொருளாளர் சி. குணசேகரன், பசுமை ரெட் சி ராஸ் மாவட்ட அமைப்பாளர் அ மலைக்கண்ணன், ராமநாதபுரம் ரத்ததான முகாம் மாவட்ட அமைப்பாளர் ஆசிரியர் எஸ். அய்யப்பன் பாராட்டினார். மன்ற உறுப்பினர் எ.இன்பன்ட் அபிநாஸ் நன்றி கூறினார். ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனை டாக்டர் ஞானகுமார் தலைமையில் மருத்துவ குழுவினர் 53 மாணவர்களிடம் ரத்தம் சேகரித்தனர். மோசே இளைஞர் மன்ற உறுப்பினர்கள் எஸ். டேனியல், ஜே.ரபேல், ரஞ்சித் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!