தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ்நிலையத்திற்கு தினதோரும் 300க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்லுகின்றனர். பஸ்நிலையத்தை சுற்றி பிரபலமான துணி கடைகள், மளிகை கடைகள், செல்ஷாப் போன்றவை செயல்பட்டு வருகின்றது.
பொதுமக்கள் தினதோரும் அரசு மற்றும் தனியார் வேலைகளுக்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகளும், வெளியூர், வெளிமாநிலம் என பல்வேறு இடங்களுக்கு செல்ல ஆயிரக்கணக்கனோர் சென்று வருகின்றனர். பஸ்நிலையத்தில் இருந்து பெல்ரம்பட்டி, ஆத்துக்கொட்டாய், அமானிமல்லாபுரம், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, ஜக்கசமுத்திரம் மற்றும் காரிமங்கலம், காவேரிப்பட்டிணம் ஆகிய உள்ளூர் பகுதிகளுக்கும், சென்னை, கோவை, சேலம், பெங்களூரு, மைசூர் போன்ற பகுதிகளுக்கும் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
இவ்வளவு மக்கள் தொகை உள்ள பஸ்நிலையத்தில் குடிநீர் இல்லாமல் பயனிகள் பெரும் சிரமம் அரைந்து வருகின்றனர். மேலும் தனியார் பேருந்து நிலையம் மற்றும் நகர பேருந்து நிலையத்தில் 500லிட்டர் அளவு கொண்ட இரண்டு சின்டெக்ஸ் டெங்க் உள்ளது. இதில் மாதக்கணக்கில் தண்ணீயின்றி காய்ந்து உள்ளது. அரசில் கட்சி பொதுகூட்டம் போன்ற சமயங்களில் சுகதாரமற்ற முறையில் உள்ள குடிநீரை ஊற்றுவதால் பொதுமக்களுக்கு காய்ச்சல், தலைவலி,மூட்டுவலி, சிக்கன்குன்யா, டெங்கு போன்ற நோய்கள் பரவிவதால் இந்த குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
சில அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு 24மணி நேரமும் பஸ்நிலையத்தில் சுத்தமான குடிநீர் வழங்க முன்வந்தால் பேரூராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கீடு செய்யாமல் காலம் கடத்தி வருகின்றதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பஸ்நிலையத்தில் பல இடங்களில் ஆக்கிரமைப்பு செய்துள்ள கடைகளை அகற்றி விட்டு பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க இடம் ஒதுக்கிடு செய்ய வேண்டும் என்றும் இனி கோடை காலம் துவங்குவதால் பயணிகளின் குடிநீர் தேவை அதிகரிக்கும். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பஸ்நிலையத்தில் இடத்தை தேர்வு செய்து பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி:- சிங்காரவேலு, தர்மபுரி




You must be logged in to post a comment.