18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பணி முடிந்ததும் தொகை கிடைக்காமல் திண்டாடும் ஓப்பந்தகாரர் – ஆட்சியரிடம் மனு..வீடியோ..

பணி முடிந்ததும் தொகை கிடைக்காமல் திண்டாடும் ஓப்பந்தகாரர் – ஆட்சியரிடம் மனு..வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் January 28, 2019, 11:05 pm

திண்டுக்கல் R.M காலனி பிள்ளையார் பாளையத்தில் வசித்து வரும் இளவரசன் என்பவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் தான் செய்த ஒப்பந்த பணிக்கு இரண்டு வருடமாக பணம் கிடைக்கவில்லை என மனு கொடுத்துள்ளார்.

மனுவில் நான் கடந்த 2017ஆம் ஆண்டு Karadi Project and Motor. L.T.D. என்ற மாநகராட்சி ஒப்பந்த நிறுவனத்திடம் இருந்து திண்டுக்கல் மாநகராட்சி ஒப்பந்த பணியினை துணை ஒப்பந்தம் பெற்று சாலை போடுதல்.  பேவர் கற்கள் ரோடு மற்றும்  பாதாள சாக்கடை கட்டிட பணிகள்  ஒப்பந்த அடிப்படையில் செய்து கொடுத்துள்ளேன் இதற்கான ஒப்பந்தத் தொகை இரு பிரிவுகளாக ரூபாய் 89 லட்சம் வேலை முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும் ஒப்பந்த தொகை எனக்கு வழங்கப்படவில்லை இது குறித்து நான் பலமுறை திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியதற்கு இன்னும் பண்டு வரவில்லை என்று என்னை அலைக்கழிக்கிறார்கள், இதனால் எனக்கு மிகுந்த மன வேதனையாக உள்ளது ஆகவே மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் விசாரித்து எனது ஒப்பந்த தொகை கிடைத்திட உதவி செய்யுமாறு மனுவில் கூறியுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!