18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை ..

மதுரை தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை ..

எழுதியவர்: ஆசிரியர் January 28, 2019, 5:01 pm

இன்று மதுரை மாநகர் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து வாகனங்களையும் மதுரை மாநகர் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து தெப்பக்குளத்தின் நான்கு பக்கங்களிலும் வாகனங்களை நிறுத்தாமல் இருக்க 50 அறிவிப்பு பதாகைகள் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

மேலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு என்று தனித்தனியே நிறுத்தும் இடங்கள் ஒதுக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு பதாகைகளும் வைக்கப்பட உள்ளன. பொதுமக்கள் தங்களது வாகனங்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!