18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருச்சி- சமயபுரத்தில் இயங்கி வரும் வங்கி ஒன்றில் லாக்கரை உடைத்து கொள்ளை..

திருச்சி- சமயபுரத்தில் இயங்கி வரும் வங்கி ஒன்றில் லாக்கரை உடைத்து கொள்ளை..

எழுதியவர்: ஆசிரியர் January 28, 2019, 4:48 pm

திருச்சி – சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி செயல்பட்டு வருகிறது. சனி மற்றும் ஞாயிற்று கிழமை விடுமுறையைத் தொடர்ந்து வங்கிப் பணியாளர்கள் இன்று (28/01/2019) வங்கிக்கு வந்தனர். உள்ளே சென்றபோது சுவர் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் போலீசார் அங்கு வந்து பார்த்தபோது 5 லாக்கர்கள் உடைக்கப்பட்டிருந்தது. உடைக்கப்பட்ட லாக்கர்கள் ஐந்தும் வாடிக்கையாளர்களின் லாக்கர்கள்.

வங்கியின் முக்கிய லாக்கர் உடைக்கப்படவில்லை. லாக்கர்களை உடைக்க பயன்படுத்திய வெல்டிங் மெஷின், கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட உபகரணங்களை கொள்ளையர்கள் அங்கேயே விட்டுச் சென்றுவிட்டதால் போலீசார் அவைகளை கைப்பற்றினர். இதைஅறித்த வாடிக்கையாளர்கள் தங்கள் லாக்கர்கள் உடைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தில் வங்கி முன்பு குவிந்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!