17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமேஸ்வரம் மீனவர் 4 பேர் சிறைபிடிப்பு..

ராமேஸ்வரம் மீனவர் 4 பேர் சிறைபிடிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் January 28, 2019, 4:36 pm

இராமேஸ்வரத்தைச்சேர்ந்த ஜேம்ஸ் என்பவரது விசைப்படகில் இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியைச் சேர்ந்த சுப்ரமணி மகன் முருகேசன் 47, ஆறுமுகம் மகன் நவீன் 35, சேதுபதி மகன் ஆனந்த் 42, ஏரகாடு பகுதியைச் சேர்ந்த நம்புராஜன் செந்தில்பாண்டி 37 ஆகியோர் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று (28.01.2019) அதிகாலை தொழிலுக்கு சென்றனர். மீன் பிடிக்க வலை விரித்தபோது கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை அந்த விசைப்படகை சுற்றி வளைத்து 4 மீனவர்களையும் சிறை பிடித்தது. நான்கு மீனவர்களை விசைப்படகுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!