17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராணிப்பேட்டை திருவல்லம் சிமெண்ட் பாலம் பணி துவக்கம்..

ராணிப்பேட்டை திருவல்லம் சிமெண்ட் பாலம் பணி துவக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் January 28, 2019, 12:32 pm

ராணிப்பேட்டை திருவலம் அருகே ரூ 1.5 கோடி மதிப்பில் ரயில்வே சிமெண்ட் பாலம் அமைக்கும் பணி துவக்கம் . வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை முகுந்தராயபுரம் ரயில் நிலையம் அருகே சீக ராஜபுரம் ஹவுசிங் போர்டு அருகில் சென்னை – பெங்களூரு ரயில் பாதையில் சிறிய ரயில் பாலம் உள்ளது. தற்போது அது இரும்பு கர்டர் பாலமாக உள்ளது.

தென்னக ரயில்வே இந்த பாதையில் ரயில்வேகத்தை அதிகரிக்க உள்ளது.. அதனால் இரும்பு கர்டர் அகற்றப்பட்டு ரூ 1.5 கோடி மதிப்பில் சிமெண்ட் கர்டர் அமைக்கும் பணி நேற்று துவங்கியது. இந்த பணி முடிந்த பிறகு ரயிலின் வேகம் அதிகரிக்கும் பணி 2 மாதத்தில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பணி செய்யும்போது ரயில் போக்குவரத்து 8 மணி நேரத்திற்கு நிறுத்தப்படும் என தென்னக ரயில்வே ரயில்வே அறிவித்து உள்ளது.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!