17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் 70வது குடியரசு தின விழா..

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் 70வது குடியரசு தின விழா..

எழுதியவர்: ஆசிரியர் January 26, 2019, 8:09 pm

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் 70வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு மாநகராட்சி ஆணையர்  டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடி ஏற்றினார்.

இந்நிகழ்ச்சியில்  2018ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் மற்றும் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கும் பணியினை சிறப்பாக செய்து முடித்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினத்திற்கு சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்ட சுகாதார ஆய்வாளர் மற்றும் பொது சுகாதார பணியாளர்களுக்கு  பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் ரொக்கத் தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.  மேலும் மாநகராட்சியின் அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்த்தல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் துணிப்பைகள் வழங்குதல் மற்றும் பொது மக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வகையில் பச்சை/ஊதா நிற தொட்டிகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் மாநகராட்சி நிர்வாக பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையாமாநகராட்சி உதவி ஆணையர் (பணியமைப்பு) பிரபு குமார் ஜோசப்நிர்வாக அலுவலர்சுகாதார அலுவலர்கள்மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக  கலந்து கொண்டனர்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!