17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் இரவிலும் தொடரும் போராட்டம்..

இராமநாதபுரத்தில் இரவிலும் தொடரும் போராட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் January 25, 2019, 11:05 pm

இராமநாதபுரத்தில் இரவிலும் தொடரும் போராட்டம் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 4வது நாளாக இன்று நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 1534 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 685 ஆண்கள் , தாஜ் பேலஸில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஏ ஒன் மகாலில் தங்க வைக்கப்பட்ட 849 பெண்கள் விடுவிக்கப்பட்டனர். தாஜ் பேலஸில் தொடர்ந்து தங்கப் பட்டுள்ள ஆண்களை விடுவிக்கக் கோரி பெண்கள் கோஷங்கள் எழுப்பினர். கைது நடவடிக்கையில் பெயர் கொடுத்து முக்கிய நிர்வாகிகள் தலைமறைவாகினர். அவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி பெண் ஊழியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

செய்தி, முருகன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!