17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி..

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி..

எழுதியவர்: ஆசிரியர் January 25, 2019, 12:09 pm

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் துவக்கி வைத்தார். இப்பேரணியில், எந்த ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது. வாக்காளர் என்பதில் பெருமை கொள்வோம். வாக்களிக்கத் தயார் என்பேன் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவியர் கைகளில் ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.

இராமநாதபுரம் அரண்மனை ராமலிங்க விலாசம் முன் உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம் என்ற விழிப்புணர்வு வாசகம் தாங்கிய ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் சி. முத்துமாரி, கோட்டாட்சியர் சுமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ. அண்ணாதுரை , தாசில்தார் பொன். கார்த்திகேயன், நகர் வர்த்தகர் சங்கத் தலைவர் ஜெகதீசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!