17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாம்பனில் 560 மது பாட்டில்களுடன் 3 பேர் சிக்கினர்..

பாம்பனில் 560 மது பாட்டில்களுடன் 3 பேர் சிக்கினர்..

எழுதியவர்: ஆசிரியர் January 23, 2019, 11:10 pm

இராமேஸ்வரம் தீவு பகுதிகளில் அரசு மதுக் கடைகள் திறக்க கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக ராமேஸ்வரம் தீவுக்குள் சிலர் பாம்பன், மண்டபம், வாலாந்தரவை பகுதிகளில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்று வருகின்றனர். இது பற்றி தகவல் அறிந்த பாம்பன் போலீஸார பாம்பன் சாலை பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அது வழியாக வந்த காரை நிறுத்தி விசாரித்தனர். அதிலிருந்த 3 பேர் முரண்பட்ட பதில் அளித்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தை சோதனை செய்த போது 560 மது பாட்டில்களை இருந்தது தெரிந்தது.

இதனையடுத்து வாகனத்தில் இருந்த தங்கபாண்டி, சுதாகர், இருளவேல் ஆகியோரை கைது செய்தனர். மது பாட்டில்கள் ஏற்றி வந்த சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!