18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து இருவர் பலி..

ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து இருவர் பலி..

எழுதியவர்: ஆசிரியர் January 23, 2019, 6:50 pm

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள வடகாடு மலை பகுதியில் கிணற்றின் அருகே விளையாடி கொண்டிருந்த 3 வயதுள்ள குழந்தை ராஜஹர்சினி தவறி கிணற்றின் உள்ளே விழுந்தார்.இந்நிலையில் குழந்தை ஹர்சினியை காப்பாற்ற சென்ற அவரது தாத்தா வேலுசாமியும் (வயது 53) கிணற்றில் விழுந்ததில் இருவரும் தண்ணிரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!