18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையான போட்டிகள்..

தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையான போட்டிகள்..

எழுதியவர்: ஆசிரியர் January 23, 2019, 2:39 pm

தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 22.01.2019 அன்று கணிப்பொறியில்துறை சார்பாக கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகள் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணியளவில் இறை வணக்கத்துடன் துவங்கியது. ஆறு கல்லூரிகளிலிருந்து 80 மாணவிகள் பங்கேற்றனர்.

அதில் இளங்கலை சார்பாக கீழக்கரை முகமது சகத் பொறியியல் கல்லூரி மாணவிகளும், முதுகலை சார்பாக சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மாணவிகளும் சுழற்கோப்பையை வென்றனர். தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர் இரகு ஆண்டனி அவர்கள் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். மாலை 3.30 மணியளவில் விழா இனிதே நிறைவுற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!