17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சியில் சீரான குடிநீர் வழங்கிட மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை..

ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சியில் சீரான குடிநீர் வழங்கிட மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் January 22, 2019, 11:20 am

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி, இங்குள்ள அனைத்து வார்டுகளிலும் பெரும்பாலான வீடுகளில் ஆற்றுத்தண்ணீர் குடிநீர் இணைப்புகளில் நேரடியாக மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டு குடிதண்ணீர் உறிஞ்சப்படுவதாகவும், இதனால் வீடுகளுக்கு சீரான குடிநீர் வினியோகம் இல்லையெனவும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் நேரில் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை, எனவே அனைத்து வார்டுகளில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்ட மின்மோட்டார்களை பறிமுதல் செய்யவும், சீரான குடிநீர் வழங்குவதை உறுதிபடுத்துமாறும், அவ்வப்போது நேரில் ஆய்வு மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்குமாறு பொதுநலன்கருதி மக்கள் வழிகாட்டி இயக்கத்தின் சார்பில் M.ஞானசேவியர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!