17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..

பாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் January 20, 2019, 12:55 pm

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கல் விழாவின் போது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டும், கொங்கு மண்டலத்தில் ரேக்லா ரேஸ்சும், வட மாவட்டங்களான தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எருதாட்டம் என்கிற நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி அதனை சுற்றி உள்ள சீரியனஹள்ளி, கோட்டூர், பெல்ரம்பட்டி, பேவுஹள்ளி என 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து பொங்கல் வைத்தனர். அதன் பின்னர் தாங்கள் வளர்கும் காளை மாடுகளுக்கு அலங்கராம் செய்யப்பட்டு பூஜைகள் செய்தனர்.

அதன் பின்னர் தங்கள் குலவழக்கப்படி கிராமத்தின் கோயில் முன்பு காளைகளை அழைத்து வரப்பட்டு மாலை அணிவித்து பூஜை செய்து பிறகு காளைகளுக்கு புனித நீர் தெளித்து வெவ்வொரு காளைகளாக வாடிவாசல் வழியாக விடப்பட்டது. அப்போது சீறிபாய்ந்து ஓடிய காளைகளை இளைஞர்கள் சீண்டி விளையாடி மகிழ்ந்தனர். இந்த எருதாட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் 100 காளைகள் கலந்துகொண்டது. அருகே உள்ள கிராங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் என பலர் ஆர்வமாக வந்து எருதாட்டத்தை கண்டு மகிழ்ந்தனர். சிறந்த காளைக்கு பரிசு வழங்கப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பு பணியில் 50க்கும் மேற்பட்ட மாரண்டஹள்ளி போலீசார் ஈடுப்பட்டனர்.

செய்தி:- சிங்காரவேலு, தர்மபுரி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!