18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் ஊணைப்பள்ளத்தூரில் இந்து முன்னனி கொடியேற்றம் விழா..

வேலூர் ஊணைப்பள்ளத்தூரில் இந்து முன்னனி கொடியேற்றம் விழா..

எழுதியவர்: ஆசிரியர் January 18, 2019, 7:00 pm

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டத்திற்க்கு உட்பட்ட ஊணைப்பள்ளத்தூர் கிராமத்தில் 15/1/2019 தை திருநாளை முன்னிட்டு இராம பக்தர்கள் ஒன்று கூடி இந்து முன்னனி அமைப்பின் கொடி ஏற்றும் விழா நடத்தினார்கள்.

விழாவில் வேலூர் கோட்ட தலைவர் திரு. மகேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்தார். பின்னர் இராமர் கோயிலில் முதலாம் ஆண்டு விளக்கு பூசையை துவக்கி வைத்தார். விழாவில் கௌரவ விருந்தினர்களாக மாவட்ட செயலாளர் திரு.பாண்டியன் அவர்களும், ஒன்றிய நிர்வாகிகளும், அணைக்கட்டு காட் இந்தியா சச்சங்கம் திரு.வேலாயுதம், திரு.விஷ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டுடனர். ஊர் மக்கள் முன்னிலை வகிக்க திரு.கோ.நாகராஜன் தலைமை தாங்கினார்.  முன்னதாக அக்கிராமத்தை சேர்ந்த இராம பக்தர் திரு.நா.சக்திவேல் ஏற்பாட்டில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

செய்தி:- வாரியார், வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!