17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் புதிய காவல்நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா..

கீழக்கரையில் புதிய காவல்நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா..

எழுதியவர்: ஆசிரியர் January 18, 2019, 2:12 pm

கீழக்கரை புதிய காவல் நிலைய கட்டிடடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கீழக்கரை காவல் நிலைய வளாகத்தில் இன்று (18/01/2019) காலை நடைபெற்றது.

தற்போதைய காவல் நிலைய கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் இருக்குமாம், புதிய கட்டிடம் அமைக்க பல் வேறு சமூக அமைப்புகள் கோரிக்கை எழுப்பிய வண்ணம் இருந்தனர். இந்நிலையில் புதிய கட்டிடம் அமைக்க  ரூபாய் ஒரு கோடியே இரண்டு லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட உள்ளது.

இப்பணியை இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா தொடங்கி வைத்தார். இவ்விழாவில் கீழக்கரை துணை கண்காணிப்பாளர் முருகேசன், ஆய்வாளர் முத்து மீனாட்சி, சார்பு ஆய்வாளர் செந்தில் முருகன், மற்றும் கீழக்கரை காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

தகவல்: மக்கள் டீம்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!