18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அருகே அருளொளி விநாயகர் கோயிலில் செங்கல் நடை போட்டி..

இராமநாதபுரம் அருகே அருளொளி விநாயகர் கோயிலில் செங்கல் நடை போட்டி..

எழுதியவர்: ஆசிரியர் January 17, 2019, 12:01 am

இராமநாதபுரம் மாவட்டம் அருகே வழுதூர் அருளொளி விநாயகர் கோயிலில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் பல்வேறு கிராம மக்கள் பங்கேற்றனர் செங்கல் கல்லில் இளைஞர்கள் நடந்துவரும் செங்கல் இழுக்கும் போட்டி/ சிறுமிகளுக்கான 50 மீட்டர், 100 மீட்டர் ஓட்டம், மெதுவாக சைக்கிளில் ஓட்டும் போட்டி. யானைக்கு கண் வைத்தல் போட்டி, தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி பெண்களுக்கான பாட்டிலில் தண்ணீர் நிரப்பும் போட்டி மற்றும் ஆண்கள் பெண்களுக்கான லக்கி சான்ஸ் போட்டிகள் நடைபெற்றது இளைஞர்களுக்கான 1 கி. மீ., ஓட்டப் போட்டி நடைபெற்றது. வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு வழுதூர் அருளொளி மன்றம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது. அருளொளி மன்ற நிர்வாகிகள் மோகன், ராஜா. தினகரன், சந்திரசேகர், துரை குமார், ராஜா நந்தகுமார் ராஜேஷ் ஆகியோர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். அதனை தொடர்ந்து சிறப்பு பிராத்தனை நடைபெற்ற பின் அன்ன தானம் வழங்கப்பட்டது.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!